பொங்கல் பண்டிகை வரலாறு.
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகை தை 1-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தைமாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியை (பச்சரிசி) கொண்டு பால், சர்க்கரை/வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது பானை & புது அடுப்பில் கொதிக்க விட்டு பொங்கும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது . சூரியபகவானுக்கு, மாட்டுக்கும் படைத்தது நாமும் பகிர்ந்து உண்ணுவதே பொங்கல் விழாவின் தனிச்சிறப்பாகும்.
abstract. பொங்கல் படையலில் முக்கியமாக மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக் காய்கறி வகைகள் சேர்க்கப்படும். பச்சை நெற்களை அரைத்து தவிடு நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன் படையலிடுவதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் பொங்கலன்று தமிழர்கள் அனைவரும் சைவ வகை உணவுகளையே உண்கின்றனர்..
பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? பொங்கல் என்பது தமிழர்களால் “தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்” ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு) கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது..
Uzhavar Thirunal உழவர் திருநாள்: உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் உழைப்பிற்கு உதவிகரமாக விளங்கிய கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே தைப்பொங்கல் விழா உழவர் திருநாளாக கருதப்படுகிறது. தைப்பொங்கல் நான்கு நாள் விழாவாக உலகிலுள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது: 1. Bhogi Festival போகி பண்டிகை: போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல் / பூலாப்பூ செருகி வைப்பர். ..
2. Thai Pongal தைப்பொங்கல்: தைப்பொங்கல் தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியும் தமிழர்களால் இன்றுவரை நம்பப்படுகிறது.
4. Kaanum Pongal காணும் பொங்கல்: காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் (முக்கியமாக தமிழ்நாட்டில்) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச்சென்று தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வர்..
தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இது தமிழர்களின் மரபு, வீரம், விவசாயம் என அனைத்தையும் குறிக்கிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு..
இது தமிழர்களின் வீரத்தை போற்றும் வீர விளையாட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது..
ஜல்லிக்கட்டு வகைகள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வேலி ஜல்லிக்கட்டு: வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. வாடிவாசல் ஜல்லி கட்டு மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வடம் ஜல்லிக்கட்டு: வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்..