[Virtual Presenter] இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால் தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது. குல தெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து இம்மண்ணின் தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இஷ்ட தெய்வ வழிபாடு போல் அல்லாமல் குல தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னி பிணைந்துள்ளது. அவர்கள் அனைவரும் இம்மண்ணில் உலா வந்த சாமிகள். ஒவ்வொரு வாரமும் இது போன்ற தெய்வங்களை தான் தேடிச் சென்று பார்த்து தரிசித்து வருகிறோம். வரும் வாரமும் வரலாற்றுடன் பின்னி பிணைந்திருக்கும் இறைவனைத் தான் காண இருக்கிறோம், வாருங்கள் நிகழ்ச்சிக்குள் செல்லலாம், மக்கள் வணக்கம் இது மண்ணின் சாமிகள்.